திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளி மற்றும் சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, செயின்ட் மேரிஸ் பள்ளி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று 01.10.2026 (வியாழக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது ..
இந்த முகாமினை கவுன்சிலர் ரமேஷ் தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் மற்றும் சோழா ரோட்டரி சாங்க முன்னாள் தலைவர் அமலச்சந்திரன் , சோழா ரோட்டரி சங்க செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சோழா ரோட்டரி சங்க தலைவர் கோகுல கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் ..
இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இலவச பரிசோதனை. கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு I.O.L லென்ஸுடன் கூடிய இலவச அறுவை சிகிச்சை. போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பரிசோதனை மற்றும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் மறுநாளே வீடு திரும்பலாம் என பரிசோதனைக்கு பின் அறிவிக்கப்பட்டது.
இந்த இலவச கண் மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயண் அடைந்தனர் ..
இந்த நிகழ்வில் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த திட்ட அலுவலர்கள் வினோத், ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ..

