Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ..

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ..

Ad banner

கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது ..

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ 26000 வழங்கிட வேண்டும்,சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை,எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி புரியும்போது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்,சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்,ஐந்து ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியுச் செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட சிஐடியு செயலாளர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.