Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக இதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நடத்திய மாரத்தானில் 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

0

'- Advertisement -

உலக இதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நடத்திய மாரத்தானில் 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Ad banner

21.1 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் ₹3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது

2026: உலக இதய தினத்தை (செப்டம்பர் 29) முன்னிட்டு, திருச்சி காவேரி மருத்துவமனை தனது 11-வது ‘காவேரி மாரத்தான்’ போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.

இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில் 7,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தானில் 21.1 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஓட்டங்கள் இடம்பெற்றன.

இரண்டு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ₹3 லட்சம் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. அனைத்து வயதுடைய ஆண்கள், பெண்கள், மற்றும் மாணவ மாணவியர்களை ஒன்று திரட்டிய இந்த நிகழ்வு, உடற்பயிற்சி மற்றும் இதய பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

21.1 கி.மீ அரை மாரத்தான் போட்டியை அன்புச்செழியன், செயல்பாட்டு இயக்குநர், காவேரி மருத்துவமனை, திருச்சி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 கி.மீ சேலஞ்ச் ரன் போட்டியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ் தொடங்கி வைத்தார். 5 கி.மீ ஃபன் ரன் போட்டியை திருச்சி மாவட்ட மாவட்ட வன அலுவலர் தஎஸ். கிருத்திகா, ஐ.எஃப்.எஸ்., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் டாக்டர் ஜி.சி. கோபிநாத், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), திருச்சி மாவட்டம் மற்றும் அகல்யா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி மாவட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், காவேரி மருத்துவமனை குழுமம், பேசுகையில், “காவேரியின் பயணத்தில் திருச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. எங்கள் மருத்துவமனை தொடங்கிய இடம் இதுதான். இந்த நகரத்தில் காவேரி மாரத்தான் 11 பதிவுகளை நிறைவு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு வயதினரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கேற்று இருப்பதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்வை நோக்கி மக்கள் திரும்பி இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமையான வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை ஒன்று திரட்டும் ஒரு தளமாக காவேரி மாரத்தான் உருவாகி உள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.