Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர் முதாஸ் ஈஸாவின் வைரல் வீடியோ.

0

'- Advertisement -

 

Ad banner

️தற்போது நடைபெற்றுவரும்படோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டும் போட்டியில்

இத்தாலி நாட்டின் ஜியாமார்கோ தம்பேரிக்கும்

கத்தார் நாட்டவர் முதாஸ் ஈஸா பார்ஷிமுக்கும்

இடையே நடந்த இறுதி சுற்றில் இரண்டு நாட்டவர்களும் 2.37மீ தாண்டி சமனில் இருந்த

நிலையில்
மீண்டும் மூன்று வாய்ப்புகள் வழங்கியும் 2.37மீ க்கு மேல் இருவராலும் தாண்ட முடியவில்லை…

TVK ad

ஆனால் ஒலிம்பிக் நிர்வாகம் மீண்டும் ஒரு வாய்ப்பை இருவர்களுக்கும் வழங்கியது..!!

ஆனால் கால்முடியாமல் இத்தாலி நாட்டவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்…

முறையே தங்கபதக்கம் கத்தார் நாட்டவருக்கு கிடைத்துவிடும்…

ஆனால் கத்தார் நாட்டவரோ ஒலிம்பிக் நடுவரிடம் கேட்கிறார் நானும் விலகுவதாக அறிவித்தால் பதக்கம் இருவர்க்கும் பகிர்ந்தளிப்பாரா..? என..?

நடுவர் முறையே ஆலோசித்து…
ஆமாம் இருவர்க்கும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்தளிப்போம் என கூறியதும் யோசிக்காமல் நானும் விலகுவதாக அறிவித்தார் …

விளையாட்டில் போட்டியை தவிர ஜாதி, மதம், இனம், நாடு எதுவும் தடையில்லை என்று நிரூபித்த தருணம்..!

தற்போது கத்தார் வீரர் முதாஸ் ஈஸாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

 

நாமும் வாழ்த்துவோம்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.