Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் .

0

'- Advertisement -

Ad banner

இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் .

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் திருச்சியில் நடைபெற்றது.

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் செயலர் துவக்க உரையாற்றினார். தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். பொறியாளர் விக்னேஷ், ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். இயற்கை மருத்துவர் கௌதம் இரத்த அழுத்த பரிசோதனை செய்து

பேசுகையில், இந்தியாவில் 4 பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 12 சதவீதம் பேர் மட்டுமே ரத்த அழுத்ததை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் பாதிப்புக்குள்ளானவர்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் மாரடைப்புபோன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிக ரத்த அழுத்தம், இதயத்துக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும் அளவைக் குறைக்கும். இதன் மூலமாக, நெஞ்சுவலி, மாரடைப்பு, இதய செலிழப்பு, மாறுபட்ட இதய துடிப்பு, திடீர் மரணம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், காற்று, தண்ணீர், ஒலி, ஒளி மாசு ஆகியவற்றின் மூலமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முறையான உணவுப் பழக்கம், யோகா தியானப்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற இயற்கை மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாம் மூலம் பலர் தங்களது இரத்த அழுத்தத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். தேவையுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை‌ பெறுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.