
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி இரண்டாவது கிராஸ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குகன் சுந்தர் ( வயது 29) இருந்து வருகிறார் இவர் வழக்கம் போல் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார் . பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கோவில் முன்பக்க கதவு கேட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றகு தெரிய வந்தது .
இது குறித்து குகன் சுந்தர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

