Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது

0

'- Advertisement -

Ad banner

திருச்சி  முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்  இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உறையூர் கீழ கல் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடி அப்பாஸ் என்கிற பாலகுமார். (வயது 29) என்பவர் குடிபோதையில் கோவிலுக்கு உள்ள வந்துள்ளார்.

இதைக் கண்டு மணிமாறன் அவரை குடிபோதையில் கோயிலுக்குள் வரக்கூடாது என கண்டித்து உள்ளார்.  இந்த முன் விரோதத்தில் சம்பவத்தன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மணிமாறனின் மனைவி ஆனந்த நித்யாவை ரவுடி தாக்கியதாக கூறப்படுகிறது இது குறித்து பூசாரியின் மனைவி உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடியை உறையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.