தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இரண்டாவதாக பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து .

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது .
கிறிஸ்தவ பாடலுக்கு அடுத்து, தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டது விவாதப்பொருளாகியுள்ளது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜேஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இது குறித்து அமைச்சர் ராஜேஷ்குமாரும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது. நந்தனத்தில் உள்ள இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாக உள்ளது. இந்த கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், கிறிஸ்தவ பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு தமிழ்த்தாய் பாடப்பட்டது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது சர்ச்சையான நிலையில், தமிழக அரசு, தமிழ்த்தாய்த்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.இத்தகைய சூழ்லில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பாடலுக்கு அடுத்து, தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டது விவாதப்பொருளாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜேஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேஷ்குமார் கூறியதாவது:-பொது அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இப்படிப்பட்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும். இங்கேயும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட்டது. இது ஒரு ஒய்.எம்.சி.ஏ கல்லூரி, கிறிஸ்தவ அமைப்புக்கு உட்பட்டு வருவதால் முதலில் ஜெபம் செய்வது போல ஒரு பாடலுக்கு ஏற்பாடு செய்தார்கள். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்பட்டது என மலுப்பலாக பதில் கூறியுள்ளார்.

