த.வெ.க ஆட்சியில் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை – திருச்சி ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
த.வெ.க ஆட்சியில் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை – திருச்சி ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம், ஜெயஸ்ரீ நகர் பகுதியில் சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பவர் தீ குளிப்பதற்காக தனது பையில் மண்ணெண்ணெய் பாட்டிலை மறைத்து வைத்து ஆட்சியர் அலுவலகம் அருகில் வந்தார் அங்கு காவல்துறையினர் சோதனை செய்வதை பார்த்த அந்த நபர் சாலையிலேயே நின்று கொண்டு மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை ஆசுவாசப்படுத்தினார்.
முத்தமிழ்செல்வனின் தந்தை துரைசாமி பெயரில் பூர்வீகமான சொத்து இருந்துள்ளது. துரைசாமிக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருந்துள்ளனர் இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு துரைசாமி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விடுகிறார். துரைசாமிக்கு மூன்று பேர் வாரிசுகள் உள்ள நிலையில் அவரது சொத்தை முத்தமிழ்செல்வனின் சகோதரரான மணிவேல் என்பவர் பெயரில் கிரயம் செய்யப்பட்டு பட்டா பெற்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தமிழ்செல்வன் இது குறித்து பலமுறை மனு அளித்தும் அவருக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை, எனவே முசிறி வருவாய் கோட்டாட்சியர் துறையூர் வருவாய் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினரை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

