Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாட்டு தீவனத்தின் விலையை ஏற்றி விட்டார்கள், உயர்த்திய பால் விலையை வழங்காத சொசைட்டி அதிகாரிகள் . விவசாயிகள் வேதனை

0

'- Advertisement -

மாட்டு தீவனத்தின் விலையை ஏற்றி விட்டார்கள், உயர்த்தியபால் விலையை வழங்காத சொசைட்டி அதிகாரிகள் . விவசாயிகள் வேதனை

Ad banner

த.மா.கா விவசாயிகள் அணி கலெக்டரிடம் புகார் மனு ..

தமாகா திருச்சி மாவட்ட விவசாய அணித் தலைவர் புங்கனூர் செல்வம் மற்றும் மாநில செயலாளர் வயலூர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

தமிழக முதலமைச்சர் விஜய் 1-9 -2026 அன்று விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பசும்பால் லிட்டருக்கு ரூ 44 எருமைப்பால், ரூ. 53 என உயர்த்தி அறிவித்தார் அதன்படி முதல் பட்டுவாடா சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது அதில் ஒரு லிட்டருக்கு ரூ. 40 மட்டும் வழங்கப்பட்டது அதை சொசைட்டி அதிகாரியிடம் கேட்டபோது, ரூ. 4 பிடித்தம் செய்து அதில் ரூ.1.85 பைசா ஊழியர்கள் சம்பளம் மற்றும் மின் கட்டணத்திற்கும், மீதி உள்ள ரூ. 2.15 பைசாவில் ரூ. 1 மாத இறுதியில் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவன வழங்கும்.மீதி, 1.15 பைசா ஆண்டு பொங்கல் போனஸ் ஆக வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

விபரம் கேட்டால் மாவட்ட ஆட்சியரியம் கேட்டுக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார்கள் ஆவின் மாட்டு தீவனத்தில் மானியம் என்று சொல்லி தீவனத்தின் விலையையும் ஏற்றி விட்டால் விவசாயிகள் எப்படி வாழ்வது? தற்போது தீவனம் வருவதில்லை. இதுபோன்ற நெருக்கடிகளில் விவசாயி எப்படி வாழ்வார்கள்? எனவே இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய பால் விலையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.