Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் முதியவரை மிரட்டி ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பிடுங்கி சென்ற 2 பேர் கைது.

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் கமுதியவரை மிரட்டி ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பிடுங்கி சென்ற 2 பேர் கைது.ஒருவருக்கு வலை

Ad banner

ஸ்ரீரங்கம் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 70) இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் அங்கமுத்துயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு மேலும் அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அங்கமுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த ரவிவர்மா (வயது 21) மங்கம்மா நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 19) என்பது தெரியவந்தது மேலும் இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அங்கமுத்துவை மிரட்டி ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது இதையடுத்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிவர்மா, ராஜேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து உள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆகாஷ் என்பவர்ரை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.