கொரோனா பரவலை தடுக்கும் விதமான கட்டுப்பாடுகள் காரணமாக
இன்று காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடிய போதும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக பொதுமக்கள் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
புதுமணதம்பதிகள் தாலி பிரித்து கட்டும் நிகழ்ச்சி, பெண்கள் தங்கள் தாலி நிலைத்திருக்க வேண்டுதல் மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறு அணிந்தால்அடுத்த ஆடி பெருக்கு முன் திருமணம் ஆகிவிடும் போன்ற காரணத்தினால் அம்மனை வேண்டி படையல் வைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி ஆடிப்பெருக்கில் முக்கியமானதாகும்.
முக்கொம்பு,அம்மா மண்டபம் படித்துறை ஆகிய பகுதிகளுக்கு அரசு பொதுமக்கள் கூட தடை விதித்ததால்
உய்யக்கொண்டான் வாய்க்கால் குமிழிக்கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோயில் அருகே புதுமண ஜோடிகள்,இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தங்களது தாலிகளை பிரித்து கட்டி,மஞ்சள் கயிறு அணிந்து படையலிட்டு குழுமாயி அம்மன்கோயிலில் சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் திரும்பினர்.