Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கமிஷனரை கேள்விக்கனணகளால் துளைத்தெடுத்த மாமன்ற உறுப்பினர்கள் ….

0

'- Advertisement -

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிறுத்தம் :

Ad banner

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் ..

மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? என பரபரப்பு குற்றச்சாட்டு

ஆணையர் மீது அதிமுகவும் பகிரங்க புகார்

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்தத கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு :-

கவிதா செல்வம் (திமுக):

எனது வார்டில் இருந்து இளநிலை பொறியாளர் அலுவலகம் திடீரென சாத்தனூருக்கு மாற்றப்பட்டுள்ளது .

இதனை யாரை கேட்டு மாற்றினீர்கள்.

புஷ்பராஜ் (திமுக):

எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மே மாதத்தில் இருந்து இதுவரை ஐந்து இளநிலை பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் பணி செய்ய முடியவில்லை.

முத்து செல்வம் (திமுக):

திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியுமா ?

மேயர் அன்பழகன் :

எனக்கு தெரியாது. என்னுடைய கவனத்திற்கு வரவில்லை.

முத்து செல்வம் (திமுக):

இந்த மாநகராட்சியில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா? மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா?

அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் எழுந்து

கூச்சலிட்டனர். அப்போது மண்டல குழு தலைவர் துர்கா தேவி, முத்துச்செல்வம்,காஜாமலை விஜய்

புஷ்பராஜ், லீலா வேலு உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர் … இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு நிலவியது

மாநகராட்சி சுகாதார நல அலுவலர் :

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் 14 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகை விடப்பட்டது.

அதனால் அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.

இதற்கும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வழங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை நிறுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேயர் அன்பழகன் :

மீண்டும் அந்த தனியார் நிறுவனத்திடம் கலந்து பேசி காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கவுன்சிலர் முத்து செல்வம் :

எனது வார்டில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது …இதற்கு ஆணையர் என்ன முன்னேற்பாடு செய்துள்ளார்.

திருச்சி ஓயாமரி சுடுகாடு கடந்த ஒன்றரை மாதமாக செயல்படவில்லை.

இதனால் திருச்சி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பராமரிப்பு வேலை இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும்.

மேயர் அன்பழகன் :

இன்னும் 10 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

கமால் முஸ்தபா (திமுக):

திருச்சி தென்னூர்

அண்ணா நகர் குழுமிக்கரை பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், நர்சுகள் பணியில் இல்லை.

அதனால் கடந்த 10 நாட்களாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி நல அலுவலர்

மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியம் (திமுக):

எனது வார்டில் இருக்கும் மயானத்துக்கு காம்பவுண்டு சுவர் மற்றும் கேட் இல்லாமல் உள்ளது. அதனை சீர் செய்து தர வேண்டும்.கொல்லங்குளம் அழகுப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.எனவே அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேயர் அன்பழகன் :

பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

சீதாலட்சுமி முருகானந்தம் (திமுக):

எனது 45வது வார்டில் பல பிரச்சனை உள்ளது அதேபோல் பாதாள சாக்கடை பிரச்சனையும் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு விவாதம் நடந்தது.

நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக மாநகராட்சி ஆணையரிடம் மாமன்ற உறுப்பினர்களால்  கேட்ட பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அடிக்கடி தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்துக் கொண்டிருந்தார் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.