Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .

0

'- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .

Ad banner

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பேரவை கூட்டம்  திருச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை ) மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது செயலாளர் செல்வராஜன் வரவேற்றார் பொருளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார் மாநில இணை செயலாளர் சண்முகம் வரவு செலவு அறிக்கை வாசித்தார். இந்த பேரவை கூட்டத்தில் மாநில முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில் பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும், 2016 முதல் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்கிட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 7-வது ஊதிய ஒப்பந்த ஷரத்தினை முழுமையாக அமலாக்க வேண்டும்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு பணிக் கொடை உச்சவரம்பு தொகையை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளே ஓய்வு கால பண பலன்களை வழங்கிட வேண்டும், 2003 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கிட வேண்டும், பணிக்காலத்தில் காலமான ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்கிட வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ பணி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.