திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டச் செயலாளர் சிவா பங்கேற்பு
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30000 நிவாரணம் வழங்கிட வேண்டும்,
வறட்சியால் வேலை இல்லாமல் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவரணமாக ரூ. 15000 வழங்கிட வேண்டும்,
விவசாயிகளின் பயிர் கடன், நகைக்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட வேண்டும்,
100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை உடனே வழங்கிட வேண்டும்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி, அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட சிபிஐ சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அஞ்சுகம் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சிவா சிறப்புரையாற்றினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.