Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆளும் த.வெ.க அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

திருச்சியில் ஆளும் த.வெ.க அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ..

Ad banner

விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு ..

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதாகவும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற முயற்சி எடுக்காமல் மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் ஆளும் தவெக அரசை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமை தாங்கினார்.

முன்னாள் ஆவின் சேர்மன், திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்பு உரையாற்றினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், , திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவகுமார்,மகளிர் அணி மாநில இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

விவசாயிகள் நலனில் எப்பொழுதும் அதிமுகவிற்கு அக்கறை உண்டு.அவர்களுக்கு பாதுகாவலராக இருக்கும். ஆனால்

இன்றைக்கு த.வெ.க அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் முதலமைச்சராக எடப்பாடி வருவார் என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் அரவிந்தன், டிஆர். சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெயகுமார், கேடி. தங்கராஜ், ஜாக்குலின், வெல்லமண்டி சண்முகம், வழக்கறிஞர் வனிதா,

திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.குஅம்பிகாபதி, தென்னூர் அப்பாகுட்டி மாநில நிர்வாகிகள்

பாலக்கரை சக்திவேல் வழக்கறிஞர் முத்துமாரி, ராஜாளி சேகர், மற்றும் நிர்வாகிகள் பாலமோகன்ராஜ்,வரகனேரி ராஜேந்திரன் நத்தர்ஷா, சுதாகர்,அன்பழகன், பாலாஜி, சிந்தாமணி மகா, ராஜ்மோகன், எடத்தெரு பாபு,வசந்தம் செல்வமணி, செல்லப்பா, கமலஹாசன்,ஜான் எட்வர்டு,எடமலைப்பட்டிபுதூர் வசந்தகுமார், உறந்தை முத்தையா,  விஎம்.குமார், இலியாஸ், எம் ஆர்ஆர். முஸ்தபா,, டாஸ்மாக் பிளாட்டோ ,டிபன் கடை கார்த்திகேயன், கல்லுக்குழி சுந்தர் சிங், திருநாவுக்கரசு,நத்தர்ஷா மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர்

புல்லட் ஜான்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் பேரூர் கண்ணதாசன்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் தமிழழகன்,புங்கனூர் ஜார்ஜ், சாத்தனூர் வாசு, எஸ்பி முத்து கருப்பன், டைமன் திருப்பதி, சுந்தர்ராஜ், அம்பி பாலு, இ.பி.ஏகாம்பரம், வி.என்.ஆர் செல்வம் ,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த

முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி,முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மல்லிகா சின்னசாமி, டி.இந்திராகாந்தி, எம்ஐடி.நடராஜன், சுபத்ரா சசிகுமார், சமயபுரம் டி.ராமு, கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், ஜெயசீலன், அறிவழகன் விஜய், டி.அறிவழகன், சந்திரமோகன், ஜெ. பேரவை அய்யம்பாளையம் ரமேஷ்,துறையூர் பிரகாஷ் மற்றும்

புறநகர் கிழக்கு நிர்வாகிகள் எஸ்பி பாண்டியன், ராவணன்,சூப்பர் நடேசன் உள்ளிட்ட பலர் 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.