தமிழக வெற்றிக்கழக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் எஸ்.ரபீக் கடும் கண்டனம்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் எஸ்.ரபீக் கடும் கண்டனம்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-,

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜகவின் புதிய வடிவமாக தமிழக வெற்றி கழக அரசு உருவாகி உள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டில் ஒன்றான குர்பானி வழக்கில் மேல்முறையீடு இல்லை. இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு. தற்போது முஸ்லிம் இட ஒதுக்கீடு அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாடல் அரசாக செயல்படும் தமிழக வெற்றிக்கழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு மாநில தலைவர் பீமநகர் எஸ்.ரபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

