ஸ்டேடியத்தில் அமைச்சர் சரத் போதை பொருள் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய வீடியோவில் பீச்சில் நடந்து வரும் அமைச்சர் கில்லி சரத், கையில் பாட்டில் வைத்து குடித்துக்கொண்டிருக்கிறார். அது மதுபானம் என திமுக ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்கிறார்கள். இதற்கு சரத்குமார் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் சரத் தொடர்பான வீடியோ வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் சரத் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்தார். கையில் மொபைலை வைத்து அதன் மேல் பவுடர் போன்ற ஒன்றை கொட்டி, அதை ஏடிஎம் கார்டு கொண்டு பிரித்துக்கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர் சரத் போதை பொருளை பயன்படுத்துகிறார் என்றும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்தனர்.
குறிப்பாக எதிர்க்கட்சியான திமுக, அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல அமைச்சர் தனது நடவடிக்கை குறித்து உண்மையான விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், வேறு மாநிலத்திலிருந்து வரவழைத்த மருத்துவ குழுவினரை கொண்டு தான் போதைப்பொருள் பயன்பாட்டாளர் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் பாஜக ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

