அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி .திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அ ம முக வேட்பாளர் என திருச்சி மாநகர் முழுவதும் கொளுத்தும் வெயிலிலும் சுழன்று சுழன்று ஓய்வின்றி பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட எடத்தெருவில் அமைந்துள்ள யாது குல சங்க நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்து தனது ஜனநாயக கடமை நிறைவேற்றினார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:-
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறிப்பாக தாலிக்கு தங்கம்,அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம், அம்மா குடிநீர்,அம்மா மருத்துவ பெட்டகம்,ஏழைகளுக்கு ஆடு மாடுகள் என பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தியது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகள் பொது மக்கள் இடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் குடும்ப அட்டைதாரருக்கு பத்தாயிரம் , இலவச
பிரிட்ஜ் 297 வாக்குறுதிகளுடன் கூடுதலாக பத்து முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இந்த 307 வாக்குறுதிகளும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.எனவே இந்த முறை தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி .

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ஜோசப் விஜய்,இனிகோ இருதயராஜ்
இருவரும் சிறுபான்மை வாக்குகளை பிரித்து விடுவதால் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெறுவார் என்பது உறுதி என கூறினார்.

