Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காட்டூரில் எல்.ஏ. சினிமா சார்பில் தமிழகத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் கமல்ஹாசன் எம்.பி. திறந்து வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி காட்டூரில் எல்.ஏ. சினிமா சார்பில் தமிழகத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் கமல்ஹாசன் எம்.பி. திறந்து வைத்தார்.

Ad banner

திருச்சி தஞ்சாவூர் மெயின்ரோட்டில் காட்டூர் என்ற இடத்தில் எல்.ஏ. சினிமா நிறுவனம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய தமிழகத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எல்.ஏ.வின் டால்பி சினிமா தியேட்டரை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தியேட்டரின் முதல் காட்சிக்கான டிக்கெட்டை கமல்ஹாசன் வெளியிட அதனை தியேட்டர் நிர்வாக இயக்குநர் அஜய் சாமுவேல் பிரான்சிஸ் பெற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து கமல்ஹாசன் பேசும்போது ‘என்னுடைய கலை தளத்தில் இன்னொரு அற்புதமான அரங்கம் உருவாகியுள்ளது. சினிமா இன்னும், இன்னும் முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல் டால்பி சினிமாவை ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரித்தது. துணிச்சலான முடிவுதான் இந்த டால்பி திரையரங்கம். இதற்கு அனுபவம், இளமை மற்றும் அறிவு ஆகியவை வேண்டும். சினிமா என்பது கூட்டுக் குடும்பத்தைப்போல அற்புதமானது. பக்கத்து இருக்கையில் உள்ளவர்கள் யார், எந்த ஊர், என்ன சாதி என்று கேட்காத அற்புதமான கோவில்கள் திரையரங்கம்’ என்றார்.

 

தியேட்டரின் சிறப்புகள்

 

முன்னதாக டால்பி சினிமா தியேட்டரின் சிறப்புகள் குறித்து அதன் இந்திய இயக்குனர் சமீர் சேட் கூறுகையில் ‘டால்பி தியேட்டர் என்பது சாதாரண தியேட்டரை காட்டிலும் இருமடங்கு தெளிவான பிரகாசத்தைக் கொண்டது. மும்மடங்கு வண்ண சமநிலை கொண்டது. திரையரங்கத்தின் எந்த இருக்கையில் அமர்ந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான காட்சியமைப்பு தெரியும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒலி அமைப்புகளையும் இதில் கேட்டு ரசிக்க முடியும். 6 திரைகள் உள்ள இந்த தியேட்டரில் அதிகபட்சமாக 4-வது திரையில் 450 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 திரைகளிலும் சேர்த்து மொத்தமாக 1,500 க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அப்போது அருகில் சவுத் இந்தியா தலைமை மேலாளர் வெங்கட், ஆல் இந்தியா சவுண்ட் மற்றும் புரொடக்சன் இன்சார்ஜ் ஷான் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் காட்டூர் எல். ஏ.சினிமா தியேட்டரை வடிவமைப்பதற்காக மும்பையில் ஆர்க்கிடெக்ட் டிசைனுக்காக சக்திஸ் செட்டி விருது பெற்றுள்ளார்.

 

விழாவிற்கு வந்த அனைவரையும் தொழிலதிபர்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

 

விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேசன் தலைவர் அருள்பதி, முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட், சாரநாதன் கல்லூரி தாளாளர் ரவி, முன்னாள் கள்ளிக்குடி ஊராட்சி தலைவர் கே.எஸ்.சுந்தரம்,முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ராஜா நசீர், பூங்குடி வீரமுத்து பட்டையதார், ராஜாநசீர், ஜென்னீஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் ல் சித்தார்த்தன் ஆண்டனி,

மாநகராட்சி மேயர் அன்பழகன், வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநில பொதுச்செய லாளர் கோவிந்தராஜுலு, மண்டல தலைவர் தமிழ்செல்வம்,மாவட்டத் தலைவர் ஸ்ரீதர்,மாநகர தலைவர் எஸ் ஆர் வி கண்ணன்,மாநகரச் செயலாளர் பரணி பவன் ஹோட்டல் ஆறுமுக பெருமாள்,மாநகரப் பொருளாளர் ஜானகிராமன்,இளைஞர் அணி கே எம் எஸ் மொய்தின்,மாநில இணை செயலாளர்கள் திருப்பதி,தீபக்,

இணை பட தயாரிப்பாளர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எம். செண்பகமூர்த்தி,ஜி.டி.பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி.தியாக ராஜன், ஜி.டி. டாக்டர் விக் னேஷ்வர பாலாஜி, மேலாளர் குமரப்பன், கரூர் அஜந்தா எல்லோரா டாக்கீஸ் மீனாட்சிசுந்தரம், வையாபுரி, . கார்த்திகேயன், மதன் சுந்தரம், கோவை ராஜமன்னார், சென்னை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், திருச்சி தஞ்சை திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவர் கணேஷ்குமார்,எம்.ஏ.வி. சிட் பிரைவேட் லிமிடெட் அருணாச்சலம், வினோத் கண் மருத்துவனை டாக்டர் எம்.ஏ. வினோத், வேலூர்எஸ்.பிக்சர் ஜி.சீனிவாசன், தென்காசி பி.எஸ்.எஸ். மல்ட்டி பிளக்ஸ் பி.ஜே.பிரதாப்ராஜா உள்பட திரைப்பட வினியோகஸ்தர்

சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.