Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தின் முன்னுதாரணமான தொகுதியாக மாற்றி காட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேச்சு.

0

'- Advertisement -

தொகுதி பிரச்சனைகளை தீர்க்க என்னை தேர்ந்தெடுங்கள் ; பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை முடித்த ப.குமார்.

Ad banner

தொகுதி பிரச்சனைகளை தீர்க்க என்னை தேர்ந்தெடுங்கள். பிரம்மாண்ட பேரணியுடன் பிரச்சாரத்தை முடித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார்

 

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. குமார் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவர் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை பிரம்மாண்ட பேரணியுடன் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினார்.

 

காட்டூர் தேர்தல் பணிமனையில் இருந்து தொடங்கி கல்லணை ரோடு வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்த தாள பேட்டை, கிருஷ்ண சமுத்திரம், கூத்தைப்பார், குமரேசபுரம், எழில் நகர், வாழவந்தான் கோட்டை, துவாக்குடி, அசூர் ,பழங்கனாங்குடி பூலாங்குடி நவல்பட்டு சோழமாதேவி காட்டூர் அரியமங்கலம் வழியாக மகாலட்சுமி நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பேரணியின் இறுதியில் வாக்காளர்கள் மத்தியில் முன்னாள் எம்பி யும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ப. குமார் பேசியதாவது;-

 

எந்தத் துறையாக இருந்தாலும் மக்கள் மீதான வரிகளை சுமத்தி மக்கள் விரோத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு எடுத்து விட்டனர். நான் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த அரசின் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும் கோபம்.

 

இந்த தொகுதி ஒரு அமைச்சர் தொகுதி போன்று இல்லை. காவிரி கரையில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, பட்டா என அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத அமைச்சராக இருக்கின்றார்.

 

அரியமங்கலம் குப்பை கிடங்கு, பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு மட்டுமல்ல இந்த தொகுதிக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பேன்.

 

இந்த தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு தற்போது மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றனர்.

 

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி இந்த தொகுதியை தமிழகத்தின் முன்னுதாரணமான தொகுதியாக மாற்றி காட்ட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனப் பேசினார்.

இந்தப் பேரணியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ டி பி கார்த்திக், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே டி கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் ராவணன், அம்மா பேரவை பகுதி செயலாளர் எஸ் ஆர் சபரி, பாஜக நிர்வாகிகள் எஸ் பி சரவணன், செந்தில்குமார் லாவண்யா, ராயல் கிருஷ்ணமூர்த்தி வேங்கூர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.