Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

0

'- Advertisement -

 

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் கண்ணீர் அழுத்தததிற்கான இவலச கண் பரிசோதனை முகாம்

திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் உலக கண்ணீர் அழுத்த வாரத்தை முன்னிட்டு இலவச விழிப்புணர்வு கண் பரிசோதனை முகாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கண்பார்வை அளவிடுதல், கண்ணீர் அழுத்த பரிசோதனை பக்கப் பார்வை, விழித்திரை படம் எடுத்தல், மைய கருவிழி தடிமன் அளவிடுதல் ஆகிய ரூபாய் 2000 ரூபாய் மதிப்பிலான பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது .

டாக்டர் பிரசன்னவெங்கடேஷ், ரமேஷ் மீனா குமாரி, அனுக்கிரஹா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

இம்முகாமில் ஏராளமானோரர் பங்கேற்று பலனடைந்தனர் .மேலும் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்பவர்களில் மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

மேலும் நான்காம் ஆண்டாக கல்லூரி மைதானத்தில் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை மருத்துவர்கள், ,
அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.