பெண்களின் கைத்திறனையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்யும் வகையில், மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சியில் 100 நிமிடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் குழந்தைகளுக்கான ஆடை தயாரித்து உலக சாதனை!
பெண்களின் கைத்திறனையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்யும் வகையில், மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
100 நிமிடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் பங்கேற்று கைக்குழந்தைகளுக்கான ஆடைகளைத் (Frock) தயாரிக்கும் இலக்குடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆடைகளைத் தைத்து முடித்து உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை ‘World Records Union’ அமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அமெரிக்காவிலிருந்து வருகை தந்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி, தையலுக்குத் தேவையான துணிகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. தையல் அனைவருக்கும் நலவாரிய அட்டை மற்றும் உலக சாதனைப் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து ஆடைகளும் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மகளிர் தையல் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவி பாமகணேசன் , செயலாளர் சுதா பிரபாகரன், பொருளாளர் சகி உள்ளிட்டவர் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்,இந்த சாதனை நிகழ்ச்சியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ்,ராக்போர்ட் டைம்ஸ் இதழ் ஆசிரியர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

