
திருச்சியில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ 5 பணம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை ..
திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்திரன். இவர் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று வயலூர் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து உள்ளார். பிறகு இவருடைய செல்போனில் வாட்ஸ் அப் மூலம் பணம் எடுத்ததற்கான உறுதிப்படுத்தல்குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதில் அவர் ஆம் என்று திரும்பி பதிலளித்தார். பிறகு சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்திரன் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைனில் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 83 3பணத்தை மோசடி செய்து எடுத்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஏடிஎம்மில் பணம் எடுத்த உடன் எந்த வங்கியிலும் பணம் எடுத்தீர்களா என மெசேஜ் அனுப்ப மாட்டார்கள் ,
அதேபோன்று கிரெடிட் கார்டு முலம் பொருட்கள் வாங்கிய பின் உங்கள் கிரெடிட் லிமிட் உயர்த்த வேண்டுமா உடனே என மெசேஜ் வந்தாலும் இந்த மெசேஜ்க்கு ஆம் இல்லை என்று பதில் அளித்து நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே பழைய முறை தெரிவித்துள்ளனர் …

