திருச்சியில் மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது,பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி …
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சியில் திருச்சியில் மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கைது
எஸ்.ஜ ஆர் விவகாரத்தில் இந்திய தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்பதவி விலக வேண்டும்.சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி பால்பண்ணை பகுதியில் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் இன்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இந்த நிலையில் பால் பண்ணை சாலையில் கருப்பு கொடி ஏந்தி மறியல் செய்ய முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்
இவர்களில் பலர் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தது தொடர்ந்து அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்று வேண்டில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர் இதனால் திருச்சி பால் பண்ணை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

