Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நபர். இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….

0

'- Advertisement -

Ad banner

நேற்று சனிக்கிழமை (10.10.2026 ) இரவு 8 மணிக்கு முன்பாக திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கும் தொண்டைமான் பட்டி ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி சம்பவ இடத்திலே இறந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் இறந்தவரின் உடலை கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த நபரைப் பற்றி அடையாளம் மற்றும் முகவரி தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 90805 63321 மற்றும் 94434 72524,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.