Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காய்கறி கடையில் ரூ.30 ஆயிரம் கொள்ளை,பலமுறை அலைந்தும் சோமாசம்பேட்டை காவல் நிலைய போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?வியாபாரி வேதனை

0

'- Advertisement -

திருச்சி காய்கறி கடையில் ரூ.30 ஆயிரம் கொள்ளை,பலமுறை அலைந்தும் சோமாசம்பேட்டை காவல் நிலைய போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?வியாபாரி வேதனை

Ad banner

திருச்சி தோகைமலை சாலை சோமரசம்பேட்டையில் கோபால கிருஷ்ணன் (வயது 29) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று திருக்கார்த்திகை தீப திருநாள் என்பதால் அதிக அளவு காய்கறி விற்பனையானது. அன்று இரவு கடையை அடைத்து விட்டு சென்றுவிட்டார். இன்று புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல் தனது கடையை திறந்த போது காய்கறிகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் , உடனடியாக பணம் வைத்திருக்கும் கல்லாப்பெட்டியில் போய் பார்த்தார் அப்போது அது உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ. 30,000 பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காய்கறி கடை வியாபாரி கிருஷ்ணன் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு மூன்று முறை சென்று வழக்குப் பதிய கூறியும் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது …ஆனால் அவர் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் கடையில் வந்து பார்த்தபோது கடை மேலே உள்ள தகரத்தை பிரித்துக் கொண்டு திருடன் உள்ளே இறங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் திருடுவது பதிவாகியுள்ளது.இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எப்ஐஆர் போடப்படவில்லை என கூறப்படுகிறது, இது குறித்து உடனடியாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

24 மணி நேரமும் ஆட்கள் நடமாடும் திருச்சி தோகைமலை சாலை சாலை சோமரசம்பேட்டையிலுள்ள கடையில் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.