வெளி மாநில லாட்டரியில் பரிசு தொகை விழுந்ததாக கூறி ரூ.3.38 லட்சம் ஏமாற்றியவர் எஸ் வி ஆர் மனோகரனா?போலீசார் விசாரணை
திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டில் பரிசு தொகை விழுந்ததாக கூறி ஆவின் ஊழியரிடம் ரூபாய் 3.38 லட்சம் மோசடி செய்தது எஸ்.வி. ஆர். மனோகரனா ?

வெளி மாநில லாட்டரி சீட்டில்
பரிசு தொகை விழுந்ததாக கூறி
திருச்சியில் ஆவின் ஊழியரிடம் ரூபாய் 3.38 லட்சம் மோசடி செய்து
ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்தி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் லட்சுமணன் இவர் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்.இவர் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் கேரளா லாட்டரி விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்னை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து எதிர்முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி பேசிவிட்டு லாட்டரி எண்னை தேர்ந்தெடுப்பதற்காக லட்சுமணன் செல்போன்
வாட்ஸ்அப் நம்பருக்கு சில லாட்டரி எண்களை அனுப்பினார். இதில் லட்சுமணன் மூன்று லாட்டரி எண்களை தேர்ந்தெடுத்தார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஆசாமி லட்சுமணனை தொடர்பு கொண்டு பேசி உங்களது லாட்டரி சீட் எண் ஐந்தாவது பரிசை பெற்று உள்ளதாகவும், அதன் தொகை ரூபாய் 12 லட்சம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார்.
இதனை நம்பிய லட்சுமணன் மகிழ்ச்சி அடைந்தார்.பின்னர் அந்த ஆசாமி பரிசுத்தொகையை பெற வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளது. அதற்கு நீங்கள் பணம் கட்ட வேண்டும் என்று கூறி அவரை ஏமாற்றி பல்வேறு பரிவர்த்தனைகளில் லட்சுமணனிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 38 ஆயிரத்து 587 ரூபாய் பணத்தை அந்த ஆசாமி ஒரு லீங்கில் வாங்கிக் கொண்டார்.
பின்னர் அந்த மர்ம ஆசாமி பரிசுத்தொகையும் தரவில்லை, 
கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.அந்த மர்ம ஆசாமியின் நம்பருக்கு தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ள முடியவில்லை பிறகு தான் லட்சுமணன் தான் ஏமாந்ததை உணர்ந்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளி மாநில லாட்டரி சீட்டு பெயரில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்து பெற்ற அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் லாட்டரியில் எஸ்.வி.ஆர். மனோகரன் தற்போது ஜவுளி கடை ஆரம்பித்து நான் பழைய தொழிலில் ஈடுபட வில்லை என கூறினாலும்,மறைமுகமாக இன்று வரை பல லாட்டரி வியாபாரிகளுக்கு வின்னிங் பரிசு தொகையை வழங்கி வருவதாக கூறப்படுகிறது,அந்த வகையில் இவர் இந்த மோசடியில் ஈடுபட்டரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது …

