Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேதி, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம் ….

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேதி, அறிவிப்பு

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகின்றன. அதற்குப் பதிலாக இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

 

பெண் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி (பதிவு எண்: 50/2000) என்பது 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகும். ஆனால் 2019-ஆம் ஆண்டு அந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளியில் பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கம் எதுவும் இல்லை.

 

திருச்சிராப்பள்ளியில் பயிற்சி செய்து வரும் பெண் வழக்கறிஞர்களின் நலனுக்காக, அவர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் இந்தச் சங்கத்தின் பதவியில் இரண்டு ஆண்டுகள் இருப்பார்கள்.

 

மாண்புமிகு நீதிபதி A.D. ஜெகதீஷ் சந்திரா மற்றும் மாண்புமிகு நீதிபதி S. ஸ்ரீமதி அவர்களின் 03.08.2026 தேதியிட்ட உத்தரவின்படி, இந்தத் தேர்தலை நடத்துவதற்காக மாண்புமிகு நீதிபதி N. கிருபாகரன் (ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்) மற்றும் இளங்கோ கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் உதவி சொலிசிட்டர் ஜெனரல், இந்தியா) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

ஏற்கனவே மற்ற சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் கவனத்திற்கு:

 

மற்ற சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் பெண் வழக்கறிஞர்கள், இந்தப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தலில் மட்டுமே வாக்களிப்போம் என்றும், மற்ற சங்கங்களின் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை விட்டுக்கொடுக்கிறோம் என்றும் Teller Committee-க்கு உறுதிமொழி (Undertaking) அளிக்க வேண்டும்.

 

ஆனால், அவர்கள் ஏற்கனவே உறுப்பினராக உள்ள சங்கங்களில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. வாக்குரிமை மட்டுமே இந்தச் சங்கத்திற்கு மட்டுமே இருக்கும்.

விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன:

 

பெண் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளியில் உறுப்பினராகச் சேர விரும்பும் பெண் வழக்கறிஞர்களிடமிருந்து, கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன:

 

1. விண்ணப்பங்கள் Ad Hoc Committee வழங்கும் படிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும்.

3. விண்ணப்பத்துடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்.

4. விண்ணப்பப் படிவங்கள் திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் வளாகத்தில் உள்ள Ad Hoc Committee-யிடம், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, 20.11.2026 முதல் வழங்கப்படும்.

5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.11.2026 அன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

6. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

 

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

 

1. தமிழ்நாடு பார் கவுன்சில் வழங்கிய Enrolment Certificate-ன் நகல்

2. ஆதார் அட்டை நகல்

3. COP (Certificate of Practice) இருந்தால் அதன் நகல்

Ad Hoc Committee-யின் முடிவே இறுதியானது.

Ad Hoc Committee உறுப்பினர்கள்:

1. A. ராஜேந்திரன்

2. M. லட்சுமணன்

3. A. மனோகரன்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.