Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் ஜெபி

0

'- Advertisement -

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்; இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதே நோக்கம் – நிறுவனத் தலைவர் ஜெய வீரபாண்டியன் பேட்டி!

Ad banner

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெய வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா, அமைப்பு பொதுச் செயலாளர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத் தலைவர் முருகேசன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் வினோத், சேலம் மாவட்டத் தலைவர் சுடலைமுத்து, பெரம்பலூர் மாவட்டப் பொதுச் செயலாளர் வசந்தகுமார், புதுக்கோட்டை மாவட்டப் பொதுச் செயலாளர் அசோக்குமார், புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெய வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வந்தாலும், மக்களுக்கான நல்ல திட்டங்களையும், சேவைகளையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் எங்களது இயக்கம் செயல்பட்டு வருகிறது.

தற்போது சுமார் 15 மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, இயக்கம் விரிவாகச் செயல்பட்டு வருகிறது. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கியக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதும் எங்களது முக்கிய நோக்கமாகும். போதை கலாச்சாரத்தால் ஏராளமான இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருவதுடன், பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி, மிகப்பெரிய சக்தியாக உருவாக்கும் பணியை நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

 

இதேபோல், எங்களது நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். எங்களது சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். நாங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த இயக்கம் தொடர்ந்து செயல்படும்.

அரசுக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், ஆட்சியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் மக்களின் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, அவற்றை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக, பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு மகளிர் உரிமைத் தொகை முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி உயர்த்தி வழங்கும் நடவடிக்கையை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.