Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

'- Advertisement -

தொழில் வாரியான நல வாரியங்களை பாதுகாக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Ad banner

கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் வலியுறுத்தல் ..

கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர், மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்க மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் போஸ், பரிமளநாதன், நாராயணசாமி , திருமுருகன், மன்சூர் அலி, விஸ்வலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொழில்வாரையான நல வாரியங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு இரண்டு சதவீதம் லிவி அமல்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களான மணல், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். தொழிலாளர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்தே தவிர்த்து தொழிற்சங்கங்கள் மூலமாக பதிவை எளிமைப்படுத்த வேண்டும்.

மாவட்டந்தோறும் குறை தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான பண பயன்கள் தர முன்வர வேண்டும்.நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கீதா மற்றும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் தாஸ் ஆகியோருக்கு பட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.