0.4% எம்டிஆர் கட்டணத்திற்கு எதிராக அக்.2-ல் “நோ யுபிஐ டே” தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருச்சி லவ்லி பேன்சி ஜலாலுதீன் அறிவிப்பு. இதுகுறித்து தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவர் லவ்லி பேன்சி ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 0.4% எம்டிஆர் கட்டணம் செலவை அதிகரிக்கும் “மொபைல் ரீடெய்லர்கள் பல ஆண்டுகளாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை யுபிஐ போன்ற டிஜிட்டல் வசதிகளுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். எங்களின் நிகர லாப வரம்பு சுமார் 0.75% முதல் 1.50% வரை மட்டுமே. இந்நிலையில் ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட யுபிஐ மூலம் வியாபார பணம் செலுத்துதல்களுக்கு 0.4% வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் கொண்டு வரப்பட உள்ளது. இது மொபைல் போன் விலை உயர்வு, விற்பனைச் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் தொழில் செலவுகளுக்கு மத்தியில் ரீடெய்லர்களின் செயல்பாட்டு செலவை மேலும் அதிகரிக்கும். சிறப்பு விகிதம் அல்லது முழு விலக்கு மொபைல் ரீடெய்லர் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் எம்டிஆர் சுமை ஏற்படலாம். ஒரே யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பைப் பயன்படுத்தும் நிலையில், குறைந்த லாபத்தில் இயங்கும் மொபைல் ரீடெய்லர் துறைக்கு ஏன் கூடுதல் எம்டிஆர் சுமை? அத்தியாவசிய மற்றும் குறைந்த லாபத் துறைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டண முறையைப் போலவே, மொபைல் ரீடெய்லர்களுக்கும் சிறப்பு எம்டிஆர் விகிதம் அல்லது முழுமையான விலக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மொபைல் ரீடெய்லர் சங்கங்களின் பிரதிநிதிகளை அரசாங்கம் அழைத்து, எங்களது கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” அக்டோபர் 2 “நோ யுபிஐ டே” இந்தக் கோரிக்கையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று “நோ யுபிஐ டே” என்ற அடையாள எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ரீடெய்லர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் யுபிஐ மூலம் பணம் பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். ரீடெய்லர் கடைகளில் யுபிஐ க்யூ ஆர் கோடு கருப்பு துணியால் மூடி அடையாள எதிர்ப்பு பதிவு செய்யப்படும். கடைகளில் பிரச்சார போஸ்டர்களை காட்சிப்படுத்தப்படும். சமூக ஊடகங்கள் மூலம் எம்டிஆர் பிரச்சினையை பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல். இந்த நடவடிக்கை டிஜிட்டல் இந்தியா அல்லது யுபிஐ பயன்பாட்டுக்கு எதிரானது அல்ல. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சிறு மற்றும் நடுத்தர ரீடெய்லர்களின் தொழில் நிலைத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் இவ்வாறு ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
0.4% எம்டிஆர் கட்டணத்திற்கு எதிராக அக்.2-ல் “நோ யுபிஐ டே” தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருச்சி லவ்லி பேன்சி ஜலாலுதீன் அறிவிப்பு.
இதுகுறித்து தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்க மாநில துணைத்தலைவர் லவ்லி பேன்சி ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
0.4% எம்டிஆர் கட்டணம் செலவை அதிகரிக்கும் மொபைல் ரீடெய்லர்கள் பல ஆண்டுகளாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை யுபிஐ போன்ற டிஜிட்டல் வசதிகளுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். எங்களின் நிகர லாப வரம்பு சுமார் 0.75% முதல் 1.50% வரை மட்டுமே. இந்நிலையில் ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட யுபிஐ மூலம் வியாபார பணம் செலுத்துதல்களுக்கு 0.4% வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் கொண்டு வரப்பட உள்ளது. இது மொபைல் போன் விலை உயர்வு, விற்பனைச் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் தொழில் செலவுகளுக்கு மத்தியில் ரீடெய்லர்களின் செயல்பாட்டு செலவை மேலும் அதிகரிக்கும்.
சிறப்பு விகிதம் அல்லது முழு விலக்கு மொபைல் ரீடெய்லர் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் எம்டிஆர் சுமை ஏற்படலாம். ஒரே யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பைப் பயன்படுத்தும் நிலையில், குறைந்த லாபத்தில் இயங்கும் மொபைல் ரீடெய்லர் துறைக்கு ஏன் கூடுதல் எம்டிஆர் சுமை?
அத்தியாவசிய மற்றும் குறைந்த லாபத் துறைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டண முறையைப் போலவே, மொபைல் ரீடெய்லர்களுக்கும் சிறப்பு எம்டிஆர் விகிதம் அல்லது முழுமையான விலக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மொபைல் ரீடெய்லர் சங்கங்களின் பிரதிநிதிகளை அரசாங்கம் அழைத்து, எங்களது கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”
அக்டோபர் 2 “நோ யுபிஐ டே”
இந்தக் கோரிக்கையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று “நோ யுபிஐ டே” என்ற அடையாள எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ரீடெய்லர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் யுபிஐ மூலம் பணம் பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். 
ரீடெய்லர் கடைகளில் யுபிஐ க்யூ ஆர் கோடு கருப்பு துணியால் மூடி அடையாள எதிர்ப்பு பதிவு செய்யப்படும். கடைகளில் பிரச்சார போஸ்டர்களை காட்சிப்படுத்தப்படும். சமூக ஊடகங்கள் மூலம் எம்டிஆர் பிரச்சினையை பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.
இந்த நடவடிக்கை டிஜிட்டல் இந்தியா அல்லது யுபிஐ பயன்பாட்டுக்கு எதிரானது அல்ல. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், சிறு மற்றும் நடுத்தர ரீடெய்லர்களின் தொழில் நிலைத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்
இவ்வாறு ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

