Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி தலைமையில் தனியார் கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களில் டெங்கு காய்ச்சல் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

0

'- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தனியார் கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களில்  டெங்கு காய்ச்சல் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்ற நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தலைமையில்

Ad banner

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தனியார் கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களில் டெங்கு காய்ச்சல் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ஆரம்பம் முதலே டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டதால், தொடர்ந்து மாநகரப்பகுதியில் டெங்கு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகளில் ஆய்வு செய்தபொழுது திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீர் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள், தொட்டிகள், டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வா கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் வீடுகள் தோறும் இருப்பது மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் உள்ள தற்காலிக தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் கொசு புழு உற்பத்தியாவதை கட்டிட உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும், மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டால் அதற்காக தொகை வசூல் செய்வதுடன், பொது சுகாதார சட்டத்தின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் பழைய டயர்களை வைத்துள்ளவர்கள் அதில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றிவிட்டு, இனி தண்ணீர் தேங்காத இடங்களில் மட்டுமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் நல்ல தண்ணீரை பாத்திரங்களில் காற்று புகாதவாறு நன்றாக மூடி வைத்திட வேண்டும். நல்ல தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் தரைகீழ் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து, அதன் சுவர்களை வெள்ளை அடித்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். 

மேற்கண்டவாறு தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொசு உற்பத்தி ஆதாரங்களை பொதுமக்கள் நலன் கருதி, அகற்றிக்கொள்ளுமாறும், தொடர்ந்து அகற்றாவிட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காய்ச்சல் வராமல் காத்திட முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நலன் கருதி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் நே.பொண்மணி கேட்டுக்கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.