Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டி தரக்கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம் .

0

'- Advertisement -

ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டி தரக்கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம் .

Ad banner

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு..

​திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பாப்பாக்குறிச்சியில், காட்டூரிலிருந்து பாப்பாக்குறிச்சி, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை, நெய்குளம், வீதிவடங்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இணைப்புப் பாலம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

​எனவே, இந்தப் பாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித் தரக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிந்த நிலையில் உள்ள பாப்பாக்குறிச்சி பாலம் அருகில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​இப்போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காட்டூர் பகுதிச் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சின்னத்துரை போராட்டத்தைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

​போராட்டத்தை விளக்கி சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திகேயன், மாநகர் மாவட்டப் பொருளாளர் தனபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ரேணுகா, சி.பி.எம். காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர்.

​இந்த காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பகுதிப் பொருளாளர் ராமலிங்கம், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.