Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை

0

'- Advertisement -

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளிக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவர் கல்லூரியிலும் இளைய மகள் பள்ளியிலும் பயின்று வந்துள்ளார்.

Ad banner

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி சூரியதாஸ் மனைவி அவரது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்ற நிலையில் இரண்டு மகள்களும் அவரது தாயுடன் சென்றுள்ளனர்.

 

ஆனால் 15 வயதுடைய இளைய மகள் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதால் வீட்டில் இருந்துள்ளார். அதன் காரணமாக தந்தையும் வீட்டில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் , குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து அவ்வப் போது வீட்டில் யாருமில்லாத போது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் இது குறித்து அறிந்த அவரது தாய் கணவரின் மீது கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் , அனைத்து மகளிர் காவல் துறையினர் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கின் விசாரணை தொடர்பான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கின் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் , சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் , குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணகுமார் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.