நீதி கேட்டு போராடிய மக்கள் மீது மனிதாபிமானமின்றி தடியடி நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா வலியுறுத்தல்
இரட்டை கொலைக்கான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமைதி வழியில் போராடிய யாதவ மக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை முதல்வர் ஜோசப் விஜய், டி.ஜி.பி.க்கு பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் திருவேலங்குடியை சேர்ந்த பூப்பாண்டி ( வயது 25), காயா ஓடையை சேர்ந்த தேவேந்திரன் (வயது 25 ) என்ற யாதவ சமுதாயத்தினை சேர்ந்த இரு இளைஞர்களை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளது இந்த 8 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிகின்றது. இதில் 5 பேர் மட்டும் சிக்கியுள்ளனர் .மீதியுள்ளவர்களையும் அவர்களை ஏவியவர்களையும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை
இந்த இரட்டை கொலையை கண்டித்தும் , மீதமுள்ள கொலையாளிகளையும், கூலிப்படையை ஏவி கொலை செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் யாதவ சமுதாய மக்கள் இன்று காளையார் கோவிலில் அமையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி கேட்டு போராடிய மக்களை காவல்துறையினர் கைது செய்தது மட்டுமின்றி , போராடியவர்கள் மீதே மனிதாபிமானமின்றி தடியடி நடத்தி காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர்
கொலை குற்றவாளிகளையும்,அவர்களை ஏவியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தும் காவல்துறையினர் நீதிக்காக போராடியவர்கள் மீது கைது மற்றும் தடியடி நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்குரியதாகும்
காவல்துறையினருக்கு எப்போதும் ஒரு குணம் உண்டு…
என்னவெனில் அரசியல் மற்றும் பணபலம் உள்ளவர்கள் காவல்துறையினரை மக்கள் முன்பு ஏளனமாக பேசினாலும் ,தகாத வார்த்தையில் திட்டி னாலும் ,ஏன் அடித்தாலும் கூட கண்டுக்கொள்வதில்லை.
ஆனால் நீதிக்காக போராடும் ஏழைகள்- அப்பாவி மக்கள் மீது மட்டும் அவ்வப்போது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது வழக்கமாகிவிட்டது..அப்ப்படித்தான் யாதவ சமுதாயத்தினர் மீது நடந்த தடியடி என்பது வேதனையான விசயம்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ,காவல்துறை தலைமை இயக்குனர்,தென் மண்டல ஐ.ஜி.ஆகியோர் இப்பிரச்சனையில் தலையிட்டு
யாதவ சமுதாய இளைஞர்கள் இருவரை கொலை செய்து தப்பிய மீதமுள்ள கூலிப்படையினரையும்,அவர்களை ஏவிய உண்மை குற்றவாளிகளையும் உடனே கைது செய்து தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க ஆவன செய்ய வேண்டும்
அதே சமயம் நீதிக்காக போராடிய யாதவ மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்தும் – தடியடியும் நடத்தியும் காயப்படுத்திய சம்பத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவர் மீதும்
உடனே முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகின்றோம்
இவ்வாறு பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

