திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவி லாவண்யா (வயது 27) இருவரும் செங்கல் தொழிலாளி.
இந்நிலையில் இன்று விடியற் காலை இருவரும் திண்டுக்கல்லில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பொதுப் பெட்டியில் பயணம் செய்து வந்து கொண்டு இருந்தனர். இவர்கள் இருவரும் இன்று விடியற் காலை திருச்சி அருகே மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும், வையம்பட்டி ரெயில் நிலையத்திற்கும் இடையே வந்த பொழுது பொது திடீரென்று இருக்கையில் இருந்து வெளியே வந்த அரசப்பன் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இறந்து கிடந்த அரசப்பன் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் பூபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

