ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு, தொடர்பு எண் …….
ரயிலில் அடிபட்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு
நேற்று வியாழக்கிழமை ( 17.09.2026) மாலை 7மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் மருதூர் ரயில் நிலையத்திற்கும் குளித்தலை ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சம்பவ இடத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். இறந்தவரின் உடலை திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவிதா கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சவக்கிடங்கில் வைத்து உள்ளனர் .
.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இறந்த நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 94434 72524 மற்றும் 90805 63321

