ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிப்பு.திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு. முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் உடந்தை என அமைச்சர் ரமேஷ் பேட்டி
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு
குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் போலி பட்டா மற்றும் போலியான தாய் ஆவணங்கள் தயாரித்து, தங்களுக்கு உரிமை இருப்பது போல காட்டி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் போலி பட்டா மற்றும் போலியான தாய் ஆவணங்கள் தயாரித்து, தங்களுக்கு உரிமை இருப்பது போல காட்டி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் மற்றும் சென்னை நங்கவாரத்தை சேர்ந்த பத்மஜா ரெங்கராஜன், பெங்களூரை சேர்ந்த விஜயா கிருஷ்ணசாமி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சௌந்தரராஜன், பாண்டிச்சேரியை சேர்ந்த வெங்கடவரதன் அப்போது இருந்த ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் ஆகிய 6 பேர்
மீது போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த நிலப்பதிவில் தொடர்புடைய ஆவணங்கள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த நிலப்பதிவில் தொடர்புடைய ஆவணங்கள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில் நிலங்களை முறைகேடாக பதிவு செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பத்திரப்பதிவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது:-
போலி ஆவணங்கள் தயாரித்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திமுக பகுதி செயலாளர் ராம் குமார் பத்திர பதிவு செய்துள்ளார். உரிய ஆதர ஆதாரங்கள் இருந்ததால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் இருந்திருக்கலாம்.
யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இது போன்று புகார்கள் இருந்தால் ஆதாரத்தோடு கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

