Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருணையற்ற உத்தரவை இந்த அரசு திரும்ப பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் வேண்டுகோள்

0

'- Advertisement -

பட்ட காலிலே படும் என்பார்கள். ஆனால் இங்கே ஆசிரியர்கள் காலையே இழந்து ஆதாரம் இன்றி முடமாக்கப்பட்டுள்ளனர்.

Ad banner

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வேண்டி 23 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வந்தது.தமிழ் நாட்டின் வரலாற்றில் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் மிக நீண்ட போராட்டம் இதுதான்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்தது கடந்த திமுக அரசு. ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பு ஆட்சி முடிவதற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் தங்கள் வாக்குறுதியை மறந்து TAPS என்ற திட்டத்தை அமல்படுத்தப் போவதாக ஒரு அரசாணை வெளியானது. இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பங்களிப்பை அரசே எடுத்துக் கொண்டு அதை திரும்ப அவர்களுக்கே ஓய்வூதியமாக தருவது தான் அதன் சாராம்சம். குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலே இந்த திட்டத்திற்கு தகுதியாவார்கள் என்று இந்த அரசாணை தெரிவித்தது. டேப்ஸ் திட்டத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செயயும் பணத்தையும் அவர்கள் பெற இருக்கும் ஓய்வூதியத்தையும் கணக்கிட்டால் அவர்கள் 100 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் தான் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையே மீண்டும் திரும்ப அவர்களுக்கு கிடைக்கும். இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 60 ல் இருந்து 65 வயது ஆகும். அப்படி என்றால் அவர்கள் செலுத்தும் பணம் அரசுக்கு லாபமாக இருக்குமே தவிர அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் எந்த விதத்திலும் லாபம் அளிக்காது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்த்து இருந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இந்த டேப்ஸ் திட்டத்தின் விவரங்கள் புரிய ஆரம்பித்தபோது அவர்களின் எதிர்பார்ப்பில் பெரிய இடி விழுந்தது.

தற்போது பதவியேற்றுள்ள தவெக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலனை செய்வதாக அறிவித்தது. அதை நம்பி பெருவாரியான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாற்றத்தை விரும்பி தவெக அரசுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

1.1.2026 முதல் பணி நிறைவு பெறுபவர்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசாணை தெரிவித்தது.தேர்தல் நடைமுறை தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஆகிய நடவடிக்கைகளால் உரிய உத்தரவுகள் இன்றி ஜனவரி மாதம் இறுதியில் ஓய்வு பெற்றவர்கள் முதல் மே மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித பணப்பலனும் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதற்காக அவர்களுக்கு முழுமையாக பணப்பலன்களை கணக்கிடாமல் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதத்தை நிவாரணத் தொகையாக வழங்குவதாக அரசு அறிவித்தது. ஜனவரி மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய வீட்டுக் கடன், தங்கள் பிள்ளைகளின் திருமண செலவுகள், கல்விக்கடன் போன்றவற்றை நேர் செய்வதற்கு முழு பணப்பலனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர் ‌. இந்த 30 சதவீத நிவாரணத் தொகை மட்டுமே தர முடியும் பணப்பயன்கள் எதுவும் தர முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்ததே அவர்களின் எதிர்பார்ப்பை தூள்தூளாக்கியது.

ஆனால் அதைவிட கொடுமையிலும் கொடுமையாக தற்போது அந்த நிவாரணத் தொகையும் பெறுவதற்கு 18 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று ஒரு கருணையற்ற உத்தரவை இந்த அரசு பிறப்பித்துள்ளது. அப்படி 18 ஆண்டுகளை விட குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வெறும் 10,000 மட்டுமே வழங்கப்படும் மேலும் அப்படி கூடுதலாக தொகை வழங்கியிருந்தால் அவை மீண்டும் பிடித்த செய்யப்படும் என்று இந்த உத்தரவு கூறுகிறது.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் மாணவர்கள் எதிர்காலத்தையும் முன்னேற்றுவதற்காக பணியாற்றும் அரசு ஆசிரியர்களுக்கும் ஓய்வு பெற்றால் அரசு எவ்வித கருணையும் காட்ட முன்வரவில்லை என்பதை இந்த உத்தரவு தெரிவிக்கிறது

டாப்ஸ் திட்டம் ஒழிக்கப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தவெக அரசு தங்களது தேர்தல் கால வாக்குறுதியாக அளித்திருந்ததுஅதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்படி உத்தரவை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற்று ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கேட்டுக்கொள்கின் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சே.நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.