திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும் தவெகவினர் ..
திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளியையொட்டி பேனர் வைத்து தவெசவினர், அத்துமீறல் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு…
திருச்சி கருமண்டபம் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திர தின விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்து எனக்கூறி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் மரச்சாரங்கள், சுதந்திர தின விழா முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. (இதே இடத்தில் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் சரஸ்வதி பூஜை வாழ்த்து மற்றும் தீபாவளி வாழ்த்து என எந்த அனுமதியும் இல்லாமல் தொடர்ந்து இதுபோன்று ஒவ்வொரு வாழ்த்தாக பேனர் வைக்க தமிழக வெற்றி கழகத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது) பள்ளி வளாகங்களின் நுழைவாயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்களின் உள்ளேயும் வெளியேயும் (எந்தெந்த இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இன்று செல்லும் என எழுதி இருப்பதை மறைத்து) பேனர்களை அடைத்து வைத்துள்ளதால் மாணவர்கள், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தற்போது கருமண்டபம் மாநகராட்சி பள்ளி அருகே வைத்துள்ள பிளக்ஸ் பேனர் காற்றில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது,இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது ….




தெருவின் நுழைவாயில்கள், தெருப் பெயர் பலகைகள் மற்றும் முக்கிய வளைவுகளிலேயே பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முறையாகக் கட்டப்படாத மரச்சாரங்கள் பலவீனமாக இருப்பதால், காற்று வீசும்போது இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் அல்லது குழந்தைகள் மீது சரிந்து விழும் அச்சம் நிலவுகிறது.
அரசியல் மற்றும் அமைப்புகளின் பெயரில் வைக்கப்படும் இந்த பேனர்களால் எந்த நேரத்திலும் பெரிய அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு, கருமண்டபம் பகுதி மட்டுமில்லாமல் திருச்சி மாநகர் முழுவதிலும் தமிழக வெற்றி கழகத்தினர் வைத்துள்ள விதியை மீறிய பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ..

