ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்
உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின் விஸ்வகர்மா என்ற இளைஞருடன் அஞ்சுவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு நாளடைவில், தகாத உறவிலும் முடிந்தது.. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது குடும்பத்தில் பூகம்பமே வெடித்தது.. கணவர் மனைவியிடம் பல அறிவுரைகளை சொன்னார். ஆனால், அஞ்சு அவரது பேச்சை காதில் வாங்கவில்லை.. குடும்பத்தினரும் பலமுறை அறிவுறுத்தி பார்த்து பலனில்லை என்பதால்,உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்சனையை கொண்டு போனார்கள்.அங்கு போலீசார் முன்னிலையில் விசாரணை நடந்தபோது, அஞ்சு திடீரென ஒரு ஷாக் தந்தார்.. “என்னால் என் கணவனை பிரிய முடியாது, அதேசமயம் என் காதலனையும் கைவிட முடியாது.. இவர்கள் 2 பேரையும் நினைத்துக் கொண்டுதான் நெற்றியில் சிந்தூரம் (குங்குமம்) வைத்து கொள்கிறேன். வேண்டுமானால் பகல் நேரங்களில் கணவருடனும், கணவர் வேலைக்கு செல்லும் இரவு நேரங்களில் காதலனுடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திக் கொள்கிறேன்” என்று ஒரே போடாக போட்டார்.இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.. ஆனால் அதற்குமேல் இன்னொரு ஷாக்கை கணவனும், காதலன் சுபமும் போலீசாருக்கு தந்தனர்.. “நாங்கள் அஞ்சுவுடன் ஒரே வீட்டில் வாழ்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.. நாங்கள் இருவருமே இந்த ஏற்பாட்டிற்கு முழு சம்மதம் தெரிவிக்கிறோம்” என்றனர்..
உடனே கணவரின் அப்பாவும், சகோதரிகளும், இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சமூகக் கட்டுப்பாடுகளையும் குடும்பக் கவுரவத்தையும் சுட்டிக்காட்டி, இதெல்லாம் விபரீத முடிவு.. இதை செய்தால் எங்கள் குடும்ப மானமே போய்விடும என்று எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சட்ட விதிகளுக்கு புறம்பான அஞ்சுவின் இந்த கோரிக்கையை கேட்டதும் விழிபிதுங்கிய போலீசார், அவர்களுக்கு பல மணி கவுன்சிலிங் தந்தார்கள்.. சட்ட விதிகளையும் சமூக ஒழுக்க நெறிமுறைகளையும் அஞ்சு, கணவன், காதலனுக்கு விரிவாக விளக்கி சொன்னார்கள்..
ஆனால், காவல்துறையினரால் சட்டப்பூர்வமாகவோ அல்லது சமூக முறைப்படியோ இந்த விவகாரத்திற்கு ஒரு தெளிவான தீர்வையும் காண முடியவில்லை. குடும்பத்தினரின் எதிர்ப்பும் இருந்ததால், போலீசார் அவர்களைக் கட்டாயப்படுத்தாமல், அவரவர் முடிவிற்கே விட்டுவிட்டார்களாம்..

