திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றம் ..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றம் ..
திருச்சி மாநகர் தரைகடை தள்ளுவண்டி வியாபாரிகள் கூட்டம் சங்க தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெண்டிங்கமிட்டி உறுப்பினர் S. செல்வி அறிக்கை முன்வைத்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.
சென்னை கோட்டை நோக்கி பேரணி குறித்து மாநில பொதுச்செயலாளர் கருப்பையன் பேசினார் ..சங்க நிர்வாகிகள் கோவிந்தன் செந்தில் சுரேஷ், புஷ்பாகரன் இறுதியாக வெண்டிங் கமிட்டி உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார் ..
கூட்டத்தில் தரைகடை வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட கேட்டும்,
2014 வியாபாரிகள் சட்டத்தை அமுல்படுத்திட கோரியும், சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்துவது,
அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் மழைக்காலம் நிவாரணம் வழங்க வேண்டும்,
திடிரென்று உடனுக்குடன் வந்த கடைகளை அப்புற படுத்த கூடாது.
வெண்டிங் கமிட்டி முடிவு செய்யாமல் கடை களை நடத்தும் பகுதி நடத்தாத பகுதிகள் என்பதை முடிவு செய்யக்கூடாது,திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை பேருந்து நிலையமாக செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

