Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் .

0

'- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் ..

Ad banner

அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றம்

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில நிர்வாக பதவிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர்கள் விஜயன், நாகலிங்கம் ஆகியேரர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாநில தலைவர் மதுரம் தலைமையில் மாநில செயற்குழு பொதுக் குமு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்அனைத்து துறைகளிலும் அவரவர் கல்வி தகுதி ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் அனைத்து டி பிரிவு ஊழியர்களுக்கும் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

டி பிரிவில் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு உள்ள நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முசிறி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.