Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விராலிமலை : அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் பறிபோன சிறுவனின் உயிர்

0

'- Advertisement -

குளம் போல் தேங்கி நின்ற குடிநீர் குழாய் நீர்.. குளிக்க இறங்கிய மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி

Ad banner

விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் குடி தண்ணீர் தேங்கி நின்று உள்ளது … இதுகுறித்து பலமுறை இந்த நிர்வாகத்திடம் முறைப்படி புகார் கூறியும் குழாய் சரி செய்யப்படாததால் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறும் குடிநீர் அப்பகுதியில் குளம் போல் தேங்கி நின்று உள்ளது. இதில் அதே ஊரை சேர்ந்த முத்தழகு என்பவரின் மகன் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் மகதீப் (வயது 11) குளித்துள்ளான் இதில் ஆழமான பகுதிக்கு சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள சகதிக்குள் கால் சிக்கி நீரில் மூழ்கி மூச்சு திணறி மயக்கமடைந்து உள்ளான். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிறுவனை விட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அப்பொழுது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் மாணவன் உயிர் பறிபோனது அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.