Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் திமுக தலைவரே போட்டியிட்டாலும்சாதாரண தொண்டனை நிற்க வைத்து டெபாசிட் இழக்க செய்வோம் திருச்சி கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக்கழக அரசு 100 நாள் சாதனை விளக்கம் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி பேச்சு

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்தாராநல்லூர் கீழக்கரை பஜார் வாழைக்காய் மண்டி அருகே திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வேதாத்திரி நகர் பாலு ஏற்பாட்டில் நடைபெற்றது ..

Ad banner

இந்த நிகழ்ச்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், செய்தி தொடர்பாளர் விக்னேஸ்வரன், விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே.ராஜா ஆகியோர் ஐநூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தமிழக அரசு ஒரு நாள் சாதனைகளை விளக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில் அடுத்தபடியாக… எம்.எல்.ஏ-க்கு கார் வழங்கணும். ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னா, கடந்த ஆட்சியில எல்லாம் பார்த்தீங்கன்னா எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளில போக மாட்டாங்க. அதனால அவங்களுக்கு கார் தேவைப்படாது.

​ஆனால் நம்ம தமிழக வெற்றிக் கழக மக்கள் எல்லாம் டெய்லி ஒவ்வொரு ஏரியாவா போய்க்கிட்டு இருக்காங்க. அதுக்காக தலைவர்கிட்ட கேக்குறாங்க. ‘தலைவரே, கார் வழங்கணும்’ அப்படின்னு கேட்டாங்க. அந்த ஒரு கோரிக்கையை ஏற்று நம்ம தலைவரும் ‘கார் வழங்குறேன்’ அப்படின்னு சொல்லிட்டாரு.

​, ‘அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கார் வழங்கணும்’னு சொன்ன உடனே, உடனே எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் கோவம். அட எட்டு மாவட்டத்துக்கு போயே 108 தொகுதியை புடுங்கிட்டீங்க. இந்த எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் கிளம்பி ஊருக்குள்ள போயிட்டாங்கன்னா, 234-ம் ஜெயிச்சிருவாங்கய்யா! இவங்களுக்கு கார் எப்படி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, எந்திரிச்சு நின்னு ‘கார் வேணாம், கார் வேணாம்’னு சொல்றாங்க.

​எதுக்குன்னு கேட்டா உடனே மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சொல்றாரு… கே.என்.நேரு அவர்கள் சொல்றாரு, ‘ஏப்பா வரிப்பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. எங்களுக்கு கார் வேணாம்னு சொல்றோம்’ அப்படிங்கிறாரு.

​நான் ஒன்னே ஒன்னு கேக்குறேன்… நமது மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-கிட்ட கேட்டுக்குறேன். வரிப்பணத்தை நீங்க வேஸ்ட்டே பண்ணது இல்ல, அதனாலதான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னாடி நமது எதிர்க்கட்சி தலைவர் மனம் கவர்ந்த நடிகை… அவர்களுக்காக கார் ரேஸ் 42 கோடிக்கு நடத்துனீங்களே!

​அப்ப நீங்க அமைச்சரா இருந்தீங்களே, உங்களுக்கு தெரியலையா? அன்னைக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வேஸ்ட்டா போகுதுன்னு உங்களுக்கு தெரியலையா? அப்போதும் சொல்லாத நீங்க… மக்கள் எம்.எல்.ஏ-க்கள் மக்களைத் தேடி போறதுக்கு கார் கேட்டதுக்கு கொந்தளிக்கிறீங்களே, அது ஏன்… ஏன்னு தெரியல. அதே…”நம்ம சட்டசபையில முதல்வர் பேசினாலே, எதிர்க்கட்சித் தலைவர் எந்திரிச்சு, ‘ரொம்ப பஞ்ச் பேசாதீங்க, ரொம்ப பஞ்ச் பேசாதீங்க’ன்னு சொல்றாரு.

​எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்…

​எதிர்க்கட்சித் தலைவரே! உங்களை பார்த்து பஞ்ச் பேசல தலைவரே, உங்க கட்சியையும் உங்களோட கடந்த ஆட்சியையும் பஞ்சர் பண்ணிக்கிட்டு இருக்காருங்க முதல்வர் என்று சொல்லி…”நமது தளபதி அவர்களைப் பார்த்து, நூறு கோப்புகள் இருக்கு, அதை எடுத்து நடவடிக்கை எடுங்க நடவடிக்கை எடுங்கன்னு சொல்றீங்களே… நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பார்.

​சவால் விடுகிறேன்! நாங்கள் இந்த திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து சவால் விடுகிறோம். இந்த கிழக்கு தொகுதியில் இன்னும் சில நாட்களில், சில மாதங்களில் இடைத்தேர்தல் நடந்தே தீரும்.

​மேற்கு சட்டமன்ற தொகுதி அவர்கள் நேரு அவர்களே, உங்களுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். நாங்கள் எங்கள் தளபதி சொன்னது போல சாதாரண தொண்டரை நிப்பாட்டுறோம். நீங்கள் தொண்டரை நிப்பாட்ட வேண்டாம், உங்கள் தலைவரை நிப்பாட்டுங்கள். அப்படி இல்லை என்றால் இந்த தொகுதியை… இந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரை நிப்பாட்டுங்கள். யாரை வேண்டுமானாலும் நிப்பாட்டுங்கள். உங்களுக்கு எந்த இதுவும் இல்லை. ஆனால் நாங்கள் ஒரு சாதாரண தொண்டரை நிப்பாட்டி…

​ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன், நீங்க எங்க கட்சியை பார்த்து பல விமர்சனம் வைக்கிறீங்க. பொய்யான கோரிக்கைக்கு வாக்குறுதி சொல்றீங்க… இவங்க ஒழுங்கா பண்ணல, ஒழுங்கா பண்ணலன்னு சொல்றீங்க. அனைத்தையும் சொல்லுங்க. உங்களுக்கு ஏத்தபடியே பொய் புகார்களை சொல்லிக்கிட்டே இருங்க. அதை சொல்லி கிழக்கு தொகுதி மக்களிடம் ஓட்டு கேளுங்கள். ஆனால் எதற்கும் பயப்படாமல் ஒரே ஒரு திருக்குறள் மட்டும் சொல்லுகிறேன்,

​’மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்’

​என்பதை போல, நாங்கள் எங்களின்… எல்லா விஷயமா… 100 நாள் சாதனையை விளக்கி, எங்கள் சாதனையை பற்றி சொல்லி, எல்லா அவமானத்தையும் மீறி மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். எங்கள் தகுதியை வைத்து வெற்றி பெற்று, உங்களை டெபாசிட் இழக்க வைப்போம் என்பதை சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!” என பேசினார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.