திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது கலெக்டரிடம் மனு .
திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது .. இக்கூட்டத்தில் மேலபஞ்சப்பூர் கிராம பொதுமக்கள் சார்பாக கீழப்பஞ்சபூர் கிராம மக்கள் நல சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் திருச்சி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி கிழக்கு தாலுகா கே.சாத்தனூர் பஞ்சாயத்து காலத்திலிருந்து நாங்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறோம் .. தற்போது மாநகராட்சி ஆகி 62 ஆவது வார்டாக இப்பகுதி உள்ளது,. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் குடியிருந்து வருகிறோம் . ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பஞ்சப்பூரில் அமைந்த பிறகு எங்கள் ஊரை சுற்றி அளவீடு செய்து சுற்றுச்சுவர் எடுப்பதாக அதிகாரிகள் அச்சுறுத்தி வருகிறார்கள், எனவே சர்வே அளவீடு செய்வதை தடுத்து நிறுத்தி சுற்றுச்சுவர் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..

