Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாகிய 17 வயது சிறுமி . வாலிபருக்கு போக்சோ ..

0

'- Advertisement -

திருச்சி உறையூரில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து  கர்ப்பமாகிய 17 வயது சிறுமி .. வாலிபருக்கு போக்சோ ..

Ad banner

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) .

இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று  திருமணம் செய்துள்ளார்.

பின்னர் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் மைதீனும் அந்த சிறுமியும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  இதற்கிடையே மைதீன் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றும் வேறு பகுதியில் வைத்தும் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சிரமியின் உடலில் மாற்றங்கள் தென்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளித்தனர் . பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மைதீன் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.