திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் ..
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் ..
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அதை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல ரூ.100-ல் இருந்து ரூ.300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்று, காசு இல்லாத மருத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். 2026 ஏப்ரல் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு உரிய பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.வாரிசு வேலை 5 சதவீதம் என்பதை 25 சதவீதமாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும்.ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்.1.4.2003 க்கு பின்
பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தப்படி பி.எப், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை அரசு விரைவு போக்குவரத்து கழக
திருச்சி பணிமனை முன் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த 24 மணி நேர தர்ணா போராட்டத்திற்கு, மாநில உதவிச் செயலாளர் திண்டுக்கல் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மத்திய சங்க உதவிச் செயலாளர் சடகோபன் வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்டத் தலைவர் மணிமாறன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அருள்தாஸ், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கனகராஜ் நிறைவுரையாற்றினார். நிறைவாக, மாநில உதவிச் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

