திருச்சி கிராப்பட்டி யில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
உடலை கைப்பற்றி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார, அந்த வாலிபர் திடீரென்று செல்போனை கீழே போட்டுவிட்டு, யாரும் எதிர்பாராத வகையில் அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன் பாய்ந்தார் இதில் அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் ? எதற்காக டிப்பர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்தார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறார்கள். இச்சம்பவம் திருச்சி கிராப்பட்டி பகுதி பொதுமக்கள் இடையே இன்று பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என கூறி சென்றனர்.

